மணமேடைக்கு போதையில் வந்த மணமகன் - பகீர் கொடுத்த மணமகள்!
தன்னுடையை திருமனத்திற்கே, மணமகன் குடித்துவிட்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணம்
உத்தரப்பிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியில், சஃபிபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணும், கான்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர்.
அப்போது மணமேடையில் மணப்பெண் நின்றுகொண்டிருக்க, மணமகன் போதையில் தள்ளாடிய நிலையில் வந்துள்ளார். அதனைப் பார்த்து மணமகன் மது அருந்தியிருப்பதை உணர்ந்த மணமகள், மாலைகளை இருவரும் மாற்றிக்கொள்வதற்கு முன்பாக தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என மேடையிலிருந்து இறங்கிவிட்டார்.
போதையில் மணமகன்
தொடர்ந்து இரு வீட்டாரும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தன்னுடைய சொந்த திருமண நாளிலேயே குடிக்காமல் இருக்க முடியாத நபரின் எதிர்காலம் என்ன ஆகும் என கூறி முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
அதனையடுத்து, புகாரின் பேரில் இரு வீட்டாரும் திருமணத்தின்போது பரிமாறிக்கொள்ளப்பட்ட பொருள்களையும், பணத்தையும் திருப்பித்தர ஒப்புக்கொண்டனர்.