திருமணத்திற்கு முன்பு பெண்ணுக்கு இப்படி ஒரு சடங்கா? வினோத பழக்கம்!
திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை கடத்தும் சடங்கு கவனம் பெற்றுள்ளது.
ஹிம்பா பழங்குடியினர்
நமீபியா நாட்டில் ஹிம்பா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுமார் 50,000 மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர் கிடைக்காத காரணத்தால் நாடோடி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் திருமணத்திற்கு முன்பே மணப்பெண் கடத்தப்படுகிறார். தொடர்ந்து, 100 நாட்களுக்கு உயர் பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறார். அந்த சமயத்தில், பெண் உடல் முழுவதும் சிவப்பு சேறு பூசப்படுகிறது.
வினோத பழக்கம்
கடத்தப்படும் போது புதிய ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்படுகிறார். ஓகோரி எனப்படும் தோல் தலைக்கவசம் அணிகின்றனர். இது மணப்பெண்ணின் தாய், வழங்கும் பரிசாக அறியப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் கால் முதல் முடி வரை, பெண் சிவப்பு சேற்றால் மூடப்பட்டுள்ளார். இதற்கு பலர் பலவித கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
இதே பழக்க வழக்கத்தை கானாவின் ஃப்ராஃபா பழங்குடியினரும் பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.