இனி தனியார் மூலம் காலை உணவு திட்டம்; வலுத்த கண்டனம் - மாநகராட்சி விளக்கம்!
காலை உணவுத் திட்ட சர்ச்சைக்கு சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.
காலை உணவு
மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஓராண்டுக்கு தனியாருக்கு விட மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலதரப்பிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
தனியாருக்கு ஒப்பந்தம்
இதனைத் தொடர்ந்து, இதற்கு விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 35 சமையல் கூடங்களில் இருந்து தரமாக காலை உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் உள்ள உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் இத்திட்டம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கும் நிலை ஏற்பட்டால்
அதை தரமாக தயாரித்து வழங்க உத்தேச மதிப்பீடு தயாரித்து மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால் அதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.