தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம்

M K Stalin DMK
By Irumporai Sep 16, 2022 04:11 AM GMT
Report

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

பள்ளிகளில் காலை உணவு 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காலை உணவு திட்டம் இன்று தொடக்கம் | Breakfast Scheme For Government School Students

தமிழகம் முழுவதும் தொடக்கம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.