இந்த நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Brazil
By Sumathi Aug 31, 2024 02:30 PM GMT
Report

பிரேசிலில் ‘எக்ஸ்’ தளத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எக்ஸ் தளம்

பிரேசிலில் சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த பல்வேறு கணக்குகளை எலான் மஸ்க் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் என அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ் குற்றம் சாட்டினார்.

elon musk

இதற்கிடையில், எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும்,

தவறினால் பிரேசிலில் எக்ஸ் தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இந்நிலையில், அங்கு எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எக்ஸ் தளம் இனி இலவசம் கிடையாது.. ஆண்டு கட்டணம் வசூலிக்க முடிவு - எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளம் இனி இலவசம் கிடையாது.. ஆண்டு கட்டணம் வசூலிக்க முடிவு - எலான் மஸ்க் அறிவிப்பு!

பிரேசலில் தடை 

அதோடு இதனை முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தேசிய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் எக்ஸ் செயலியை தடுக்கும் தொழில்நுட்ப தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

X

வி.பி.என்.(VPN) மூலம் எக்ஸ் செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த உத்தரவை விமர்சித்துள்ள எலான் மஸ்க், "சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு போலி நீதிபதி அதை அரசியல் நோக்கங்களுக்காக அழித்து வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.