EVM வாக்கு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும; இல்லையெனில்.. - எலான் மஸ்க்!
இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் அவ்வப்போது தொழில்நுட்பங்கள் குறித்த தனது கருத்தை பொதுவெளியில் பதிவு செய்வார். அந்தவகையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதை ஒட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் தேர்தலில் பயன்படுத்தப்படும் இ.வி.எம் வாக்கு இயந்திரம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும்.
ஹேக் செய்ய வாய்ப்பு
மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அருகில் உள்ள புயர்ட்டோ ரிக்கோ தீவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் இ.வி.எம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்ததையடுத்து எலான் மஸ்க் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பார்க்கமுடிகிறது. இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போதும் இ.வி.எம் இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.