இதை மட்டும் செய்தால் ரஷ்ய அதிபர் படுகொலை செய்யப்படுவார் - பகீர் கிளப்பிய எலான் மஸ்க்!
உக்ரைனுக்கு எதிரான போரிலிருந்து ரஷ்ய அதிபர் புதின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார் என்று டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கிய போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய இடங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள் உடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கலந்துகொண்டார்.
பரபரப்பு கருத்து
அப்போது பேசிய அவர், "உக்ரைன் போரில் புதின் தோற்க மாட்டார். உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கிறார்கள். உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உதவி உக்ரைனுக்கு பலனளிக்காது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர புதினுக்கு அழுத்தம் இருக்கிறது. ஒருவேளை அவர் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார்.
போரின் இரு தரப்பிலும் உள்ள மக்களின் இறப்பைத் தடுப்பதில்தான் நான் ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். எலான் மாஸ்க்கின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.