தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல்; 391 பேர் பலி - பரிசோதனை மேற்கொள்ள அரசு வலியுறுத்தல்!

Flu Brazil Death
By Swetha Mar 13, 2024 06:01 AM GMT
Report

பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 391 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

 பிரேசிலில், டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் போராடி வருகின்றனர். இருப்பினும் அதன் வேகம் குறையவில்லை.

தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல்; 391 பேர் பலி - பரிசோதனை மேற்கொள்ள அரசு வலியுறுத்தல்! | Brazil Reports 391 Deaths From Dengue In 2024

இந்நிலையில், பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக டெங்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

அரசு வலியுறுத்தல்

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல்; 391 பேர் பலி - பரிசோதனை மேற்கொள்ள அரசு வலியுறுத்தல்! | Brazil Reports 391 Deaths From Dengue In 2024

மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 391 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 854 இறப்புகள் விசாரணையில் உள்ளது என்றும் சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது, அந்த நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு விகிதம் 1,00,000 மக்களுக்கு 757.5 ஆக உள்ளது.