Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

Tamil nadu Death Tirupathur
By Jiyath Sep 28, 2023 09:43 AM GMT
Report

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு.

டெங்கு பாதிப்பு

தமிழகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக மக்கள் காய்ச்சல், சளி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்! | 4Yearold Girl Dies Of Dengue Fever In Tirupathur

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன்-சுமித்ரா தம்பதியினரின் யோகலட்சுமி (7) அபிநிதி (4), புருஷோத்தமன் (8மாத குழந்தை) ஆகிய 3 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 23ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 26ம் தேதி அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர்.

சிறுமி பலி

இந்நிலையில் 4 வயது குழந்தையான அபிநிதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்றோர் அபிநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து மருத்துவர்கள் சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Dengue: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்! | 4Yearold Girl Dies Of Dengue Fever In Tirupathur

அவர்கள் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உயிரிழப்பை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகத்தினர் டெங்கு தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.