தண்டவாளத்தில் அமர்ந்து கேம் விளையாடிய சிறுவர்கள் - அடுத்த நொடியில் நடந்த பயங்கரம்!
தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர்
சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டம் ரசீதாய் நகரில் உள்ள ரிசாலி பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் வீர் சிங் , புரன் ஷகு (வயது 14).இந்த நிலையில் சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் ரிசலி பகுதியில் உள்ள ரயில்வே தண்டத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.
அப்போது அந்தத் தண்டவாளத்தில் டல்லி ராஜ்ஹாரா-துரக ரயில் வந்துள்ளது . ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்காத அளவுக்கு இருவரும் தங்கள் மொபைல் போன்களில் கேம் விளையாடியுள்ளனர்.
விபத்து
இதனால், அதிவேகமாக வந்த ரயில் மோதியதில் சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சத்தீஷ்கரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.