மனைவியிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு வைப்பது தவறில்லை.. சத்தீஷ்கர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

chhattisgarhhc wifecase
By Irumporai Aug 26, 2021 12:50 PM GMT
Report

 கணவர் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும் அது தவறாகாது என்று சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

திருமணம் செய்து கொண்ட பிறகு தனது கணவரின் குடும்பம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தனது கணவர் தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதாக சத்தீஷ்கர் நீதிமன்றத்தில் ஒரு பெண் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சட்டப்படி திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது மனைவியின் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் அது கற்பழிப்பு அல்ல என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் புகார்தாரர் சட்டப்படி அவரது கணவரின் மனைவி. எனவே மனைவியுடன் பாலியல் உடலுறவு கொள்வது அது விருப்பமாக இருந்தாலும் அல்லது விருப்பமாக இல்லாவிட்டாலும் சரி பாலியல் பலாத்காரமாகாது. என்று கூறிய நீதிமன்றம், குற்றம் சாட்டிய ஒரு பெண்ணின் புகார் சட்டரீதியான விசாரணைக்கு நிற்கவில்லை என்று மனுவை விசாரித்த நீதிபதி  தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

மேலும்புகார் கொடுத்த பெண் ஒன்றும் 15 வயதுக்கு உட்பட்டவர் அல்ல என்று கூறிய நீதிபதி இந்த வழக்கில் இருந்து அவரது கணவரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். சத்தீஷ்கர் நீதிமன்றத்தின் இந்த  தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.