Friday, Jul 25, 2025

மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்.. இணையத்தில் வெளியான வைரல் வீடியோ! எங்க தெரியுமா ?

Gujarat Viral Video India
By Vidhya Senthil a year ago
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

    குஜராத்தில் முதலைகள், மாடு ஒன்றை இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி விரைவாகி வருகிறது.

குஜராத்

குஜராத்தில் கடந்த 4 நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மாட்டை இழுத்து செல்லும் முதலைகள்.. இணையத்தில் வெளியான வைரல் வீடியோ! எங்க தெரியுமா ? | Crocodiles Dragging A Cow In River Goes Viral

இந்தக் கனமழையால் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 17,800 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழை..26 பேர் உயிரிழப்பு - தாத்தளிக்கும் குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் !

வரலாறு காணாத மழை..26 பேர் உயிரிழப்பு - தாத்தளிக்கும் குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் !

  வைரல் வீடியோ

இந்நிலையில், 5 முதலைகள், மாடு ஒன்றை ஆற்றுக்குள் இழுத்துச் செல்லும் ட்ரோன் வீடியோ இணையத்தில் விரைவாகி வருகிறது. முன்னதாக குஜராத் மாநிலம் வதோதராவில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

  இதனால் 10 முதல் 15 அடி நீளமுள்ள பல முதலைகள் சாலைகள், பூங்காக்கள், குடியிருப்பு குள்   புகுதந்தது . கடந்த ஐந்து நாட்களில் 10 முதலைகளை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.