16 வயது சிறுமியுடன் கரை ஒதுங்கிய 14 வயது சிறுவன் சடலம் - காதல் விவகார பின்னணி!
காதல் ஜோடி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
சென்னை, திருவொற்றியூர் அருகே கடல் பகுதியில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து, உடலை மீட்ட போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது ஸ்ரீசாந்த் என்ற சிறுவனும், 16 வயது சந்தியா என்ற சிறுமியும் ஒரே டியூஷனில் படித்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜோடி தற்கொலை
7 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் தங்கள் கைகளை இணைத்து துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்த பெற்றோர் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதனையடுத்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு விசாரணை நீடித்து வருகிறது.