திருமணமாகாமல் பெண் குழந்தை.. சிசுவை விற்ற காதல் ஜோடி - பகீர்!

Chennai Pregnancy Crime
By Sumathi Nov 22, 2022 05:10 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை விற்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்ப்பம்

சென்னையைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர் காதலித்து வந்த நிலையில் காதலனால் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால், அந்த ஜோடி குழந்தை பிறந்ததும் அதை விற்க முடிவு செய்துள்ளனர்.

திருமணமாகாமல் பெண் குழந்தை.. சிசுவை விற்ற காதல் ஜோடி - பகீர்! | Chennai Unmarried Couple Sold Their Girl Child

மேலும் இதற்காக இடைத்தரகரையும் பிடித்து பேசியுள்லனர். தொடர்ந்து குழந்தை பிறந்து 5 நாட்களில் இடைத்தரகர் மூலம் குழந்தையை விற்றுள்ளனர். ரூ.2.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை விற்பனை

அதில் 1 லட்சத்தை காதலன், காதலிக்கும் பங்காக கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. அதன் அடிப்படையில், காதலன், இடைத்தரகர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.