கழிவறை இருக்கையை நக்க வைத்து ரேகிங் - சிறுவன் தற்கொலை!

Kerala Crime Death
By Sumathi Jan 31, 2025 01:30 PM GMT
Report

தொடர் தொல்லையால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேகிங் கொடூரம்

கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மிஹிர்(15). திருவாணியூர் பகுதியில் உள்ள குளோபல் பப்ளிக் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

மிஹிர்

பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய 1 மணி நேரத்திலேயே திடீரென 26 ஆவது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். பின் அதிர்ச்சியில் பெற்றோர் மகனின் நன்பர்களிடம் விசாரித்ததில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து போலீஸில் இதுகுறித்து புகாரளித்துள்ளனர். பின், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுவனின் தாய் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் எனது மகன் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான குழந்தையாக இருந்தான்.

ஆனால் பள்ளியில் நடந்த கொடுமைகள் அவனை கடுமையாக பாதித்திருக்கிறது. பிற மாணவர்கள் சிலர் மிஹிரை அவனது நிறத்தை வைத்தும் உடல் தோற்றத்தை வைத்தும் பள்ளியிலும், பள்ளிக்கு போய் வரும் பஸ்சிலும் என தொடர்ந்து ரேகிங் செய்துள்ளனர்.

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை!

காதல் தோல்வி முக்கியம்; 3 டேட்டிங் அனுபவம் வேண்டும் - வேலைக்கு நிறுவனம் கோரிக்கை!

சிறுவன் தற்கொலை 

தொடர்ந்து அடிப்பது, மன ரீதியாக வார்த்தைகளால் புண்படுத்துவது என சகல விதமான கொடுமைகளுக்கும் மிஹிர் ஆளாகியுள்ளான். தற்கொலை நடந்த அன்றைய தினம், மிஹிரை பள்ளி கழிவறைக்கு அழைத்துசென்று கழிவறை இருக்கையை நாக்கால் நக்கச் செய்துள்ளனர்.

மிஹிரின் தலையை கழிவறைக்குள் திணித்து தண்ணீரை பிளஸ் செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மிஹிர் இறந்த அன்று, இன்ஸ்டா பக்கத்தில் மாணவர் குழு, "fxxk நிக்கா அவன் நிஜமாவே இறந்துட்டான்" என பதிவிட்டு லைக் மற்றும் சாட் செய்து கொண்டாடியுள்ளது.

இதை அறிந்தும் பள்ளி நிர்வாகம் தங்களின் நற்பெயரை இழக்காமல் இருக்க அமைதி காக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.