நோயாளிகள்னு கூட பார்க்கல; சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்!
200 பெண்கள், ஆண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சிக்கியுள்ளார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை
அமெரிக்கா, பாஸ்டனைச் சேர்ந்தவர் டாக்டர் டெரிக் டாட். வாத நோய்கள் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டரான இவர், பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றினார்.
இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளுக்கு இடுப்பு மற்றும் அடிவயிறு சிகிச்சை, மார்பக பரிசோதனைகள், ஆண்களுக்கான டெஸ்டிகுலர் பரிசோதனைகள் மற்றும் மலக்குடல் பரிசோதனைகள் என செய்யவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
வாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்று உடல் பாகங்களை தொட்டு தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 2010-ல் இருந்தே இவர் இந்த குற்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது.
பாலியல் தொல்லை
அதன்பின், நோயாளிகளின் உறவினர் அல்லது பாதுகாவலர் இல்லாமல் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பரிசோதனைகளை செய்யக்கூடாது என அந்த மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டது. சிறுமிகள் முதல் 60 வயது பெண்கள் வரை டாக்டர் டாட் தனது கைவரிசையை காட்டியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைக்குப் பின் மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மருத்துவமனையின் சில ஊழியர்கள் மற்றும் சார்லஸ் ரிவர் மெடிக்கல் அசோசியேட்ஸ் ஊழியர்கள் சிலரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.