பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை - விரக்தியில் தாய் கொடூர முடிவு!
மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
கர்நாடகா, பெங்களூரு ஜாலஹள்ளி காலனி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் கணவர், 9 வயது மகன் மற்றும் 7 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தந்தை மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து, தாய் தனது மகன் மற்றும் மகளை மூச்சை திணறடித்து படுகொலை செய்தார். பின்னர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து விட்டதாகவும், தானும் தற்கொலை செய்யப் போவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கொலை
உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது மகன் மற்றும் மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி அந்த பெண் கொடூரமாக கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
அதில், அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. கணவர் சிறைக்கு சென்றதால் குடும்பமும் வறுமையில் வாடியது. அதனால் அந்த பெண் பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாகவும், பெற்ற மகளுக்கு கணவரே பாலியல் தொல்லை கொடுத்ததாலும் மனதளவில் அந்த பெண் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.