இந்த உடல் பாகங்கள் துடிக்குதா?அப்போ அதிர்ஷ்டம் வரப்போகுது.. துடிசாஸ்திரம் கூறுவது என்ன?
உடல் பாகம் துடித்தால் அதிர்ஷ்டம் வருமா என்பது குறித்து பார்க்கலாம்.
துடிசாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியான துடிசாஸ்திரம் என்பது நம் வாழ்வில் நடக்கவிருக்கும் நல்லது கெட்டது என இரண்டையும் நமது உடல் வெவ்வேறு சமிக்ஞைகள் மூலமாக வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், நமது உடல் சில நல்ல காரியங்கள் நடப்பதற்கு முன்பு அல்லது அதிர்ஷ்டம் வரப்போவதற்கு முன்பு சமிக்ஞைகள் காட்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்? எனவே இந்த துடிசாஸ்திரம் பற்றி பார்க்கலாம்.
கண்
துடி சாஸ்திரத்தின்படி, இடது கண் துடித்தால் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி விரைவில் வந்து சேரும். அதுவே வலது கண் துடிக்கும் பட்சத்தில் நீண்டநாள் கனவு நிறைவேறும் என கூறப்படுகிறது.
நெற்றி
நெற்றி துடிப்பது பண வரவுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதாவது பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வு, லாபகரமான வணிக ஒப்பந்தம், தொழிலில் லாபம் இதுபோன்ற ஏதோஒ ஒரு வழியில் வந்து சேருமாம்.
புருவம்
புருவங்கள் துடிப்பது விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அறிகுறி என துடி சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அதாவது, வாழ்வில் நேர்மறையான ஆற்றலுடன் உங்களுடைய,
கனவுகள் நிறைவேறுவதற்கான காலமாக இருக்கும் என்பதை குறிப்பதன் அடையாளமாக புருவங்கள் துடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இடப்பக்க நெற்றி
இடது பக்க நெற்றி துடித்தால் மிக பெரிய அதிர்ஷ்டம் வரபோவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறத. இடது பக்க நெற்றி துடிப்பது,
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான பயணத்தை மேற்கொள்ளப்போவதாக துடி சாஸ்திரம் தெரிவிக்கிறது. எனவே நெற்றி துடித்தால் உற்சாகமாக இருங்கள்.
வலப்பக்க நெற்றி
வலப்பக்க நெற்றி துடிப்பது வாழ்வில் செல்வம், மரியாதை மற்றும் வெற்றி வருவதற்கான அறிகுறியாம். பல வழிகளில் வருமானம் பெருகும் என என துடி சாஸ்திரம் தெரிவிக்கிறது.
தலையின் பின்புறம்
தலையின் பின்பகுதி நடுங்க ஆரம்பித்தால்,ஒரு வெளிநாட்டு சாகசத்தை மேற்கொள்வதற்கான அதிர்ஷ்டமான அறிகுறி என கூறப்படுகிறது. அல்லது வேலையில் இடமாற்றம் பயண வரவு பூநரவற்றையும் குறிக்கலாம்.
மீசை துடித்தல்
மீசை துடிப்பது நிதி ஆதாயங்கள் உருவாதற்கான அதிர்ஷ்ட அறிகுறியாகும்.கனவுகள் நிறைவேறுவதற்கான காலகட்டமாக இது அமையும். மீசை துடிப்பது, வரவிருக்கும் நல்ல விஷயங்களின் முதல் அறிகுறியாம்.
கன்னம் துடித்தல்
கன்னத்தின் வலது பக்கத்தில் துடிப்பு ஏற்படுதல் என்பது நிதி சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான அறிகுறி எனவும்,அதே சமயம் இடதுபுறத்தில் துடித்தால் அது கருத்து வேறுபாடுகளையும் அவமரியாதையையும் குறிக்கும் எனவும் துடி சாஸ்திரம் கூறுகிறது.