இந்த இடத்துல இந்த நாணயத்தை வையுங்க - வீட்டில் பண பிரச்சனையே இருக்காது!

Tamil nadu Astrology Money
By Jiyath May 06, 2024 09:43 AM GMT
Report

வாஸ்து தோஷம்

நாம் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் நீங்கள் இருந்தால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.

இந்த இடத்துல இந்த நாணயத்தை வையுங்க - வீட்டில் பண பிரச்சனையே இருக்காது! | Money Problems At Home Put A Coin In This Place

பிரச்சனைகள் என்பது வீட்டிலும், பணியிடத்தில் அதிகரிக்கும். இதனால் நிறைய பண பிரச்சனைகளும் ஏற்படும். எனவே வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஒருசில பரிகாரங்களை வீட்டில் செய்வதன் மூலம் பிரச்சனைகள் சரியாகும்.

அந்தவகையில் குடியிருக்கும் வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்கிறார். இதனை வீட்டில் பிரதான வாசலில் வைப்பதன் மூலம் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை!

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை!

வெள்ளி நாணயம் 

அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் பணம் வைக்கும் பை அல்லது பெட்டியை எப்போதும் காலியாக வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த இடத்துல இந்த நாணயத்தை வையுங்க - வீட்டில் பண பிரச்சனையே இருக்காது! | Money Problems At Home Put A Coin In This Place

ஏனெனில் பணம் வைக்கும் பையானது லட்சுமி தேவி இருக்கும் இடம். இந்த இடத்தை காலியாக வைத்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். எனவே பணப்பையை காலியாக வைத்திருக்காதீர்கள். மேலும், உங்கள் வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதெனில், ஒரு வெள்ளி நாணயத்தை இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் வையுங்கள்.

இதனால் புதன் மற்றும் செவ்வாயினால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இவ்விரு கிரகங்களின் தோஷங்களானது ஒருவருக்கு நிறைய கஷ்டத்தை கொடுக்கும். மேலும், முக்கியமாக பணப் பிரச்சனையால் அவதிப்பட வைக்கும்.