இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை!

India Nepal World
By Jiyath May 05, 2024 06:41 AM GMT
Report

நேபாளம் வெளியிடும் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரைப்படம் 

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுடன் அண்டை நாடான நேபாளம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தவகையில் உத்தரகண்ட்டின் லிபுலெக், காலாபானி மற்றும் லிமிபியதுரா ஆகிய பகுதிகளை நேபாளம் உரிமை கொண்டாடி வருகிறது.

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை! | Controversial Map On Nepals New Bank Note

இதனிடையே இந்த 3 பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.

பால் பவுடரில் மது; கோமாவில் 4 மாத குழந்தை - பாட்டியின் தவறால் நேர்ந்த சோகம்!

பால் பவுடரில் மது; கோமாவில் 4 மாத குழந்தை - பாட்டியின் தவறால் நேர்ந்த சோகம்!

மீண்டும் சர்ச்சை 

இந்நிலையில் அந்நாட்டின் புதிய 100 ரூபாய் நோட்டில் இந்த 3 பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிகளை கொண்ட வரைபடத்துடன் புதிய ரூ.100 நோட்டை அச்சடித்து வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவை வம்பிழுக்கும் நேபாளம் - புதிய 100 ரூபாய் நோட்டால் வெடித்த சர்ச்சை! | Controversial Map On Nepals New Bank Note

நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் இந்த முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடானது இந்தியாவின் 5 மாநிலங்களுடன் சுமார் 1,850 கிமீ எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.