துரோகத்துக்கான பலனை அனுபவிச்சே ஆகனும் - இமான் விகாரத்தில் பிரபலம் உறுதி!
இமான் விவகாரம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறிய தகவல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இமான் விவகாரம்
டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது. இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார்.
இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவர் தன் குடும்பத்தில் விவாகரத்து குறித்த பிரச்சனை எழுந்த போது சமாதானம் செய்து வைக்க முயற்சித்தார்.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த விவகாரத்தில் டி.இமான் பக்கம் சிவகார்த்திகேயன் நிற்காததால் அதைத்தான் இமான் துரோகம் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன், லியோ பட ரிலீஸ், உலகக்கோப்பை போட்டிகள், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த நிகழ்வுகளில்
மக்கள் இந்த விவகாரத்தை மறந்தாலும் தான் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர், நம்பியாரை சாட்டையால் அடிக்கும் காட்சியை வெளியிட்டு, செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
இசைமான் பேட்டி வைரல் ஆனதால் கடும் அதிர்ச்சி அடைந்தார் ப்ரின்ஸ்.
— Blue Sattai Maran (@tamiltalkies) October 24, 2023
இந்த செய்தி விவாதப்பொருள் ஆகிவிட்டால்..குடும்பங்கள் கொண்டாடும் 'நம்ம வீட்டுப்பிள்ளை' எனும் தனது இமேஜுக்கு கடும் சேதாரம் ஏற்படும் என்பதால்.. மறுநாளே சிலகோடி வரை செலவு செய்து பல மீடியாக்களின் வாயை அடைத்து… https://t.co/9OtW6feQML