அதற்கு பிறகுதான் 2 பேரும் பழக ஆரம்பிச்சாங்க; இமான் மனைவி சொன்னதெல்லாம் பொய் - பிரபல நடிகை பரபர!

D Imman
By Sumathi Oct 21, 2023 06:52 AM GMT
Report

இமானின் விவாகரத்து குறித்து பிரபல நடிகை ஒருவர் பேசியுள்ளார்.

டி.இமான் பேட்டி

டி.இமான் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டார். அதை தன்னால் வெளியில் கூற முடியாது. இதனால், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து தன்னால் பணியாற்ற முடியாது எனப் பேசியிருந்தார்.

d-imman

இந்த தகவல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசியுள்ளார்.

முன்னாள் மனைவி பதில்

சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவர் தன் குடும்பத்தில் விவாகரத்து குறித்த பிரச்சனை எழுந்த போது சமாதானம் செய்து வைக்க முயற்சித்தார். இந்த விவகாரத்தில் டி.இமான் பக்கம் சிவகார்த்திகேயன் நிற்காததால் அதைத்தான் இமான் துரோகம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

இமான் பெண் எல்லாம் பார்த்துவிட்டுதான் தன்னிடம் வந்து விவாகரத்து கேட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபல நடிகை குட்டி பத்மினி, டி.இமான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தாங்கள் நெருங்கிய நண்பர்கள். இமான் குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சரட் கூறுவதெல்லாம் பொய்.

பரபரப்பு தகவல்

தனக்கும் மோனிகாவிற்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவுகளையும் இமான்தான் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜீவனாம்ச தொகை சரியாக கொடுக்கப்படுகிறது. இமான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமிலீயா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

kutty-padmini

அவரை தங்களின் குடும்பம்தான் இமானிற்கு அறிமுகம் செய்து வைத்தது. விவாகரத்திற்கு பிறகுதான் அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்தனர். இதையெல்லாம் தன் வீட்டிற்கு இமான் மற்றும் அவரது தந்தை வந்திருந்த போது பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.