கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!
டி. இமான் விவாகரத்து பற்றி தற்போது பேசியுள்ளார்.
டி. இமான்
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டதாக டி.இமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது விவாகரத்து பேசியுள்ளார். நல்லதுக்கும் கெட்டதுக்குமான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
நீங்கள் உங்களின் வில்லன் யார் என்பதை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வில்லன் யார் என்று எனக்குத் தெரியும். இன்றும் நான் என்னுடைய குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
விவாகரத்து
விவாகரத்து பத்திரத்தில் அந்த மாதிரியான விதிமுறையை சேர்த்து தான் விவாகரத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் என் மகள்கள் என் மீது பாசமாக இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பா என்று அவர்கள் ஓடி வந்து கட்டி கொள்ளும் பாசமானது அவர்களிடத்தில் இல்லை. அவர்களுக்கு உள்ளம் பிஞ்சு உள்ளம்.
அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஒரு நாள் என்னிடம் அவர்கள் அப்பா என்ன நடந்தது? என்று கேட்கும் பொழுது, நான் அன்றைய தினம் உண்மையைச் சொல்வேன்.
கள்ள உறவில் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம். இந்த கல்யாணத்தை என்னுடைய அப்பா தான் பார்த்து எடுத்து நடத்தி வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.