இளம் வயதிலேயே மூளை பக்கவாதம் - இந்த blood group உள்ளவர்கள் எச்சரிக்கையா இருங்க..!
சமீபகாலமாக மூளைச்சாவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மூளை பக்கவாதம்
மூளைக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படும் போது ஸ்ட்ரோக் அதாவது பக்கவாதம் உண்டாகிறது. பக்கவாதத்தில் 2 வகையான பக்கவாதம் உள்ளன. ஒன்று இஸ்கிமிக் ஸ்ட்ரோக் , இரண்டாவது ரத்தக்கசிவு ஸ்ட்ரோக். சமீபகாலமாக மூளைச்சாவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
முதியவர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரிடமும் மூளைச்சாவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட blood groupக்கு குறிப்பாக இளம் வயதிலேயே மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, A, B, AB மற்றும் O குழுக்களில், எந்த பிளட் குரூப்பில் உள்ளவர்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர் .
இந்த ஆய்வில் குறிப்பிட்ட பிளட் குரூப்பைக் கொண்டவர்களுக்கு 60 வயதிற்கு முன்பே மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது .
எச்சரிக்கை
மற்ற இரத்த வகைகளைக் காட்டிலும் A பிளட் குரூப் உள்ளவர்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 16 சதவீதம் உள்ளது. O பிளட் குரூப் கொண்டவர்களுக்கு ஆரம்பக்கால பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 12 சதவீதம் குறைவாக உள்ளது.
மேலும் பிளட் குரூப் A கொண்டவர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.