அரண்மனையில் டாய்லெட்டை திருடிய கும்பல்; இதை கூடவானு யோசிக்கலாம்! அதோட மதிப்பு அப்படி..
அரண்மையில் தங்க டாய்லெட்டை திருடிய 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.
தங்க டாய்லெட்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின், பபிளென்ஹெய்ம் அரண்மனையில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட கழிப்பறை ஒன்று இருந்தது.
அதன் மதிப்பு ஏறக்குறைய 5.95 மில்லியன் டாலர். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 கோடி). இதனை இத்தாலியக் கலைஞரான மௌரிஸியோ கேட்டெலன் உருவாக்கினார்.
4 பேர் கைது
முன்னதாக, இது நியூயார்க்கிலுள்ள குகன்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், 2019ல் செப்டம்பர் மாதம் திருடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போலீஸார், 2021ல்சில மாதங்கள் கழித்து அந்த டாய்லெட்டும் மீட்கப்பட்டது.
ஆனால், அதனை திருடி சென்றபோது சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை சரி செய்து மீண்டும் இருந்த இடத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், 7 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேர் மட்டும் சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.