அலறும் நாடு; ரொட்டி, கழிப்பறை குழாய் நீர் அவலம் - இந்தியர்களை மீட்ட ராணுவம்!
388 நபர்களை பிரான்ஸ் நாட்டு தூதரகம் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கர மோதல்
வட ஆப்ரிக்க நாடான சூடானில், பயங்கர மோதல் வெடித்தது. அதில், 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரொட்டி, கழிப்பறை குழாய் நீர் மூலம் உயிர் வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.
இந்தியர்கள் மீட்பு
இந்த நிலையில் அங்கிருந்து வெளிநாட்டு குடிமக்களை மீட்கும் பணிகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, இந்தியர்களை மீட்க மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
388 நபர்களை பிரான்ஸ் நாட்டு தூதரகம் மீட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை சார்ந்தவர்களை ராணுவ விமானம் மூலம் மீட்டுள்ளனர்.