"120 -க்கு ஒரே கழிப்பறை - அப்படி சொல்லி மிரட்டுறாங்க"!! அமர் பிரசாத் ரெட்டி நீதிமன்றத்தில் தகவல்!!
கொடிக்கம்ப விவகாரத்தில் கைதான பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டி
ஜாமீன் மனுவில் தகவல் கொடிக்கம்ப விவகாரத்தில் கைதாகி இருக்கும் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் பல தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில், புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என குறிப்பிட்டு, 2,000 விசாரணை கைதிகளை அடைக்க வேண்டிய இடத்தில் 2,910 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 500 பேருக்கு ஒரு சமையல் அறை என்று இல்லாமல் 2,910 கைதிகளுக்கும் ஒரே ஒரு சமையலறை என்றுள்ளது என பதிவிட்டு, 10 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை என்ற விதியை மீறி 120 கைதிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தி வருகிறோம் என்றும் அவர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மிரட்டுகிறார்கள்
மேலும்,தன்னை அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மிரட்டுகிறார்கள் என்றும் பகிரங்கமாக அமர் பிரசாத் ரெட்டி தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜாமின் கோரி அமர் பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த மனுவில் காவல்துறை கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நவ,ம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.