பாஜக செலவில்....அயோத்திக்கு 60 நாட்கள்....இலவசமாக சென்று வரலாம்!! அண்ணாமலை அறிவிப்பு!!
அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வர மக்களுக்கு ஆகும் செலவை பாஜக ஏற்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில்
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியில் மிகவும் தீவிரம் கட்டுவதில் பெரும் முனைப்பு காட்டியது. அப்பணி வரும் ஜனவரி மாதம் முடிவடைந்து பொதுமக்களுக்காக கோயில் திறக்கப்படவுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த முன்னெடுப்பை பாஜக எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பலமாக குற்றம்சாட்டி வரும் நிலையில் தான், தளராமல் பாஜக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், தான் தமிழக பாஜக தலைவர் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் ஈடுபட்ட போது, தகவல் ஒன்றை அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், பேசும் போது, ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகு அடுத்த 60 நாட்களுக்கு தமிழகத்தில் இருந்து இலவசமாக சென்று பொதுமக்கள் ராமரை தரிசித்து வரலாம் என்று கூறி அதற்கு ஆகும் செலவை பாஜகவே ஏற்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.