அண்ணாமலை ஜெயிக்கணும் - விரலையே வெட்டிக்கொண்ட தொண்டர்
கோவை மக்களவை தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் அண்ணாமலை.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில், பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதை குறிவைத்து இந்த நகர்வு நடைபெற்றுள்ளது.
அண்ணாமலை, கடந்த சில வாரங்களாகவே கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக, பாஜகவின் தேசிய கட்சி தலைவர்களும் கோவை சென்று பிரச்சாரம் செய்தனர்.
இது வரை வெளியான கருத்துக்கணிப்புகள் படி அண்ணாமலை கடும் போட்டியை மற்ற வேட்பாளர்களுக்கு அளிப்பார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை நட்சத்திர தொகுதியாக தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை கொண்டுள்ளது.
விரல் துண்டிப்பு
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து, நாளை வாக்கெடுப்பு நடைபெறும் சூழலில், அண்ணாமலை வெற்றி பெற வெறிபிடித்த தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை.ராமலிங்கம்.
பாஜக தொண்டரான இவர், கோயம்புத்தூரில் கட்சி நிர்வாகிகளுடன் தங்கி கடந்த 10 நாட்களாக கட்சி பணி செய்து வந்துள்ளார். நேற்று பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், சட்டென பாஜக தொண்டர்கள் மத்தியில் தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து தனது விரலை வெட்டிக்கொண்டுள்ளார் துரை.ராமலிங்கம்.
ரத்தம் கொடியதையும் பொருட்படுத்தாமல் அவர், "அண்ணாமலை வெற்றி பெறுவார்" என உணர்ச்சி பெருக்கில் கோஷமிட்டுள்ளார். இது அங்கு குழிமிருந்தவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சையின் மூலம் மீண்டும் விரல் ஓடவைக்கப்பட்டுள்ளது.