பேசிக்கொண்டிருக்கும் போதே கண்கலங்கிய அண்ணாமலை - கோஷமிட்டு தேற்றிய முதியவர்கள்

Tamil nadu BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Karthick Apr 17, 2024 07:23 AM GMT
Report

 பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதியோர் இல்லத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை பிரச்சாரம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவருக்கு ஆதரவாக கட்சியின் தேசிய தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர்.

annamalai-cries-in-old-age-home-in-coimbatore

தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்த அண்ணாமலை, நேற்று முதியோர் இல்லத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது வருமாறு,

உணர்ச்சிவசத்தில் அழ..

கடந்த ஒரு வருட காலமாக இங்கு வந்து உங்களை சந்தித்து உங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்த போதும் என்னால் வர இயலவில்லை. இப்பொது தேர்தல் பரப்புரை நிறைவாக உங்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்து வந்துவிட்டேன்.

கோவையில் காத்திருக்கும் அதிர்ச்சி - முந்துவது யார்?அனல் பறக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

கோவையில் காத்திருக்கும் அதிர்ச்சி - முந்துவது யார்?அனல் பறக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

உங்களுக்கு மகனாக பணியாற்ற காத்திருக்கிறேன். எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, அண்ணாமலை திடீரென உணர்ச்சிவசத்தில் அழத் துவங்கினார்.

annamalai-cries-in-old-age-home-in-coimbatore

அவருக்கு அங்கிருந்த முதியவர்கள் ஆறுதல் தெரிவிக்கும் விதமாக "ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்" மிட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு அட்சதை போட்டும் மலர் தூவியும் தங்களது ஆதரவாய் தெரிவித்துள்ளனர்.