கோவையில் காத்திருக்கும் அதிர்ச்சி - முந்துவது யார்?அனல் பறக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Naam tamilar kachchi ADMK DMK BJP Lok Sabha Election 2024
By Karthick Apr 16, 2024 11:31 PM GMT
Report

நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மீது தான் நாட்டின் முழு கவனமும் திரும்பியுள்ளது.

மக்களவை தேர்தல்

வரும் 19-ஆம் தேதி துவங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை பல கட்டமாக நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கின்றது.

தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, 2 இடதுசாரிகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

pre-poll-election-opinion-annamalai-shock

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, SDPI, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துக்கணிப்பு

தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் தான் முதல்முதலாக நடைபெறும் நிலையில், பிரச்சாரம் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் தேர்தலை முன்னிட்டு கருத்துக்கணிப்பை பிரபல தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாகும் திமுக! பரபரக்கவைக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அந்நாளிதழின் படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் மாநிலத்தில் ஆட்சி செய்யும் திமுக தலைமையிலான கூட்டணி 27 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pre-poll-election-opinion-annamalai-shock

அதாவது திமுக நேரடியாக போட்டியிடும் வட - மத்திய - தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம் ,ஆரணி ,திருவண்ணாமலை,வேலூர்,தஞ்சாவூர்,தருமபுரி,பெரம்பலூர்,தென்காசி,கோவை,பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

pre-poll-election-opinion-annamalai-shock

கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் திருவள்ளூர் ,மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கடலூர், சிவகங்கை,புதுச்சேரி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

pre-poll-election-opinion-annamalai-shock

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 7 தொகுதிகளில் வெல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ,திருச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகளை அக்கட்சி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pre-poll-election-opinion-annamalai-shock

மீதமுள்ள 6 இடங்களில் இராமநாதபுரம் ,தேனி ,நீலகிரி ,கரூர், விருதுநகர், கன்னியாகுமரி இழுபறி நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில், அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் திமுகவே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.