நீட் Full Form சொல்லட்டும் விஜய்.அப்புறம் பேசலாம்!! பாஜகவின் வினோஜ் பி செல்வம் விமர்சனம்
விஜய் கல்வி விருது விழாவில் நேற்று பேசிய போது,நீட் தேர்வு குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து பேசியிருந்தார்.
பினோஜ் பி செல்வம் விமர்சனம்
இதற்கு தமிழக அரசியல் கட்சியினரிடம் இருந்து கலவையான கருத்துக்களே கிடைக்கப்பெறுகின்றன. செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் நாடாளுமன்ற வேட்பாளரான வினோஜ் பி செல்வத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், முதலில் விஜய்யிடம் நீட் தேர்வின் Full Form கேளுங்கள். அவர் மக்களை சந்திக்கணும். என்னிடம் நீங்கள் கேள்வி கேட்பது போல அவரிடமும் கேள்வி எழுப்புங்கள். எதற்காக அவர் நீட் வேண்டாம் என கூறுகிறார் என கேட்க வேண்டும்.
3 காரணம்
ஏன் வேண்டாம் என 3 காரணங்கள் சொல்லணும். மக்கள் அதனை வைத்து புரிந்து கொள்வார்கள். நடிகர்கள் பின் ஏமாந்து போக மக்கள் தயாராக இல்லை. யாரோ எழுதி கொடுத்ததை அவர் பேசுகிறார்.
நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்க இருக்கிறார்கள். ஆனால், மாநிலத்திற்கு தலைமை ஏற்க விரும்புவதில்லை.
cut, copy, paste செய்வதை நிறுத்திவிட்டு, எதற்காக நீட் கொண்டு வரப்பட்டது என்பதை நிறுத்தி விட்டு, அவர் ஆராய்ந்து உண்மை தண்மை புரிந்து கொண்டு பேசவேண்டும்.
அறிக்கை'ல கையெழுத்து மட்டும் போடுகிறார். 2 படங்கள் நடிக்கிறார். முடித்து விட்டு அரசியலுக்கு வரட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம்.