மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அத்வானி - உச்சகட்ட பதற்றத்தில் பாஜக தலைவர்கள்!
உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் பயணம்
பாஜக மூத்த தலைவரும் ,முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி 1941 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இதனை தொடர்ந்து ஸ்யாம் பிரகாஷ் முக்கர்ஜி 1951 ல் தொடங்கிய ஜன சங்கத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இணைந்ததும் அத்வானி ஜன சங்கத்தின் உறுப்பினரானார்.
அதன் பிறகு 1989 ஆம் ஆண்டில் புது டெல்லியில் இருந்து மோகினி கிரியை தோற்கடித்து முதல் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவில் அத்வானியின் பங்குஅத்வானி 1990 களின் முற்பகுதியில் அயோத்தியின் ராமர் கோயிலுக்கான தனது ரத யாத்திரையின் மூலம் பாஜகவை தேசிய அளவில் உயர்த்தினார்.தனது அடுத்தடுத்த வளர்ச்சியில் மூலம் பெயர் பெற்றார் .
உடல்நலக்குறைவு
இதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லாகூருக்கு விஜயம் செய்தபோது பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை அவர் பாராட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது . இதனை தொடர்ந்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.
தற்பொழுது 96 வயதாகும் எல்.கே.அத்வானி கடந்த ஜூன் 26-ம் தேதி வயது முதிர்வு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.
(எல்.கே.அத்வானிக்கு சமீபத்தில் மார்ச் 30, 2024 அன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)