பாஜகவில் சேராவிடில் கைது தான் - ஆம் ஆத்மி அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஆம் ஆத்மி அமைச்சர் பாஜக மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மிரட்டும் பாஜக
டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
சிறையில் இருந்தாலும் அவரே முதல்வராகத் தொடர்வார் என்று ஆம் ஆத்மி உறுதியாக தெரிவித்துள்ளது. அவரும் அங்கிருந்தே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, நான் பாஜகவில் இணைய வேண்டும் என்று என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள்.
அமைச்சர் குற்றச்சாட்டு
எனக்கு இரண்டு ஆப்ஷன்கள் இருப்பதாக சொன்னார்கள். ஒன்று பாஜகவில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வது. அப்படி பாஜகவில் இணையவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்கள் என்றார்கள். பிரமதர் மோடி அனைத்து ஆம் ஆத்மி தலைவர்களையும் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம் ஆத்மி கட்சி சிதைந்துவிடும் என்று பாஜக எதிர்பார்த்தது. இருப்பினும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியதைக் கண்டு அவர்கள் மிரண்டு போய்விட்டார்கள்.
எங்கள் அனைவரையும் சிறையில் தள்ளுங்கள்.. நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கடைசி மூச்சு வரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிற்போம்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.