அரவிந்த் கெஜ்ரிவால் கைது; வெடிக்கும் போராட்டம் - இந்தியா கூட்டணிக்கு அழைப்பு!
நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது.
கெஜ்ரிவால் கைது
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால், தொடர்ந்து ஆஜர் ஆகாமலேயே இருந்து வந்தார்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால்,
"நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக கண்டுபிடித்தல் என்னை தூக்கிலிடுங்கள்" - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!
ஆம் ஆத்மி அழைப்பு
தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. அதன்பின், கைது வாரட்ண்டுடன் கெஜ்ரிவால் வீட்டை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் 4 மணி நேர ரெய்டுக்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது.
ஒன்றிய அரசுக்கு மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்! 'இந்தியா' தக்க பதிலடி கொடுக்கும்" என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.