"நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக கண்டுபிடித்தல் என்னை தூக்கிலிடுங்கள்" - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!
நான் ஊழல் செய்ததாக கண்டறிந்தால் அந்த கணமே என்னை தூக்கிலிடுங்கள் என்று டெல்லி முதல்வர் மேடையில் ஆவேசமாக பேசியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம்
பஞ்சாப் மாநிலத்தில், மக்களுக்கு தரமான சுகாதாரா சேவைகளை இலவசமாக வழங்கும் விதமாக புதிய 80 ஆம் ஆத்மி கிளினிக்குகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை தாங்கி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சி மீதான ஊழல் புகார்கள், விசாரணை ஆகியவை குறித்து மத்திய பாஜக அரசு மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
தொடர்ந்து அவர், " சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் காவல்துறையை என்னை பின் தொடர்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒரே ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது.
கெஜ்ரிவால் ஒரு திருடன் என்பதை எந்த வகையிலாவது நிரூபிப்பதும், அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக” என்று கூறினார்.
மேலும் அவர், "நான் மோடிஜியிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன், கெஜ்ரிவால் ஊழல் செய்தார் என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இருக்க முடியாது.
எனக்கு எதிராக ஒரு பைசா ஊழல் கண்டுபிடிக்கும் நாளில் என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள் என்று நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.