Thursday, May 8, 2025

கெஜ்ரிவால் நாற்காலியில் அடுத்ததாக யார்? தலைநகரை ஆளப்போகும் அதிஷி!

Delhi Arvind Kejriwal Enforcement Directorate
By Sumathi a year ago
Report

கெஜ்ரிவால் அரசியல் வாரிசாக அமைச்சர் அதிஷி முன்னிலை வகிக்கிறார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து, அவரது ஆம் ஆத்மி கட்சியில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

atishi with wrvind kejriwal

தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் கெஜ்ரிவால் சில தினங்களில் நீதிமன்ற காவலுக்கு செல்லவுள்ளார். இந்நிலையில் அவரது இடத்தை நிரப்ப இருப்பது அவரது மனைவியான சுனிதா கெஜ்ரிவால்.

அடுத்தது டெல்லி நிதியமைச்சர் அதிஷி. அதிஷி(43) ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் படிப்புகளை முடித்தவர். மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக அரசியலைத் தொடங்கி,

பாஜகவினரை வெறுக்க வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி தகவலால் பரபரப்பு!

பாஜகவினரை வெறுக்க வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி தகவலால் பரபரப்பு!

அதிஷி முன்னிலை

படிப்படியாக கட்சியின் நிர்வாக மட்டங்களில் உயர்ந்தார்.2020 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கல்காஜி தொகுதியில் நின்று வென்ற இவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

atishi

கல்வி, நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் சேவைகள் போன்ற பலதரப்பட்ட இலாகாக்கள் அவர் வசம் இருந்தன. மைச்சரவையின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, அதிஷிக்கு குறிப்பிடத்தக்க 12 துறைகள் ஒதுக்கப்பட்டன.

இதன் மூலம் கட்சியில் இரண்டாவது-தலைவராக நிலைநிறுத்தப்படுகிறார். எனவே, அடுத்த கட்டமாக அதிஷி தலைநகரை ஆளப்போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.