பாஜகவினரை வெறுக்க வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி தகவலால் பரபரப்பு!

Viral Video Delhi Arvind Kejriwal
By Sumathi Mar 23, 2024 08:20 AM GMT
Report

பாஜகவினரை வெறுக்க வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவினரை வெறுக்க வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி தகவலால் பரபரப்பு! | Sunita Kejriwal Shares Kejriwals Message From Jail

இந்நிலையில், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள தகவல் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது; வெடிக்கும் போராட்டம் - இந்தியா கூட்டணிக்கு அழைப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது; வெடிக்கும் போராட்டம் - இந்தியா கூட்டணிக்கு அழைப்பு!

மனைவி வீடியோ

அதில், "நான் சிறையில் அடைக்கப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அனைவரும் சமூக நலன் மற்றும் பொது நலனுக்காக உழைக்கும் பணியை நிறுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். இதன் காரணமாக பாஜகவினரை வெறுக்க வேண்டாம்.

அவர்கள் நம் சகோதர சகோதரிகள். கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று டெல்லியில் உள்ள பெண்கள் நினைத்துக் கொண்டிருக்க கூடும். ரூ.1000 கிடைக்குமா என்று யாருக்குத் தெரியும்? உங்கள் சகோதரர், உங்கள் மகனை நம்புமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கக்கூடிய சிறை எதுவும் இல்லை. நான் விரைவில் வெளியே வந்து எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளதாக சுனிதா குறிப்பிட்டுள்ளார்.