முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதா? இதைத்தான் செய்யப்போகிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்!
சிறையில் இருந்தவாறே அரசை நடத்துவேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட பிறகு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசை நடத்துவேன்
அப்போது, 6 நாட்கள் (வரும் 28-ம் தேதி) கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், சிறையில் இருந்தவாறே அரசை நடத்துவேன் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்