15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாயும் உடந்தை - பாஜக நிர்வாகி கொடூரம்!

BJP Sexual harassment Madurai Crime
By Sumathi Apr 01, 2024 06:49 AM GMT
Report

15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார்.

எம்.எஸ்.ஷா.

இந்நிலையில், இவர் மீது நபர் ஒருவர் னைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளது.

தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, பாஜக பிரமுகருடன் தனியாக இருந்து வந்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்; கதறிய 16 வயது சிறுவன் - ஆயுள் தண்டனை!

பாலியல் தொல்லை கொடுத்த திருநங்கைகள்; கதறிய 16 வயது சிறுவன் - ஆயுள் தண்டனை!

சிக்கிய பாஜக நிர்வாகி

வாட்ஸ் அப் மூலமாக, நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறி அழைத்துச் சென்று 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வேறு மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு,

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தாயும் உடந்தை - பாஜக நிர்வாகி கொடூரம்! | Bjp Shah Physically Harassing 15 Year Girl Madurai

சிறுமிக்கு புதிய ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார். தனது மனைவியிடம் கடனை அடைத்து விடுவதாகக் கூறி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததோடு மனைவியின் மூலமாக மகளையும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், எம்..எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.