அமைச்சர் தேரை இழுக்க பாஜவினர் எதிர்ப்பு - தேரோட்டத்தில் பரபரப்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவில் அமைச்சர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அமைச்சருக்கு எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள குமாரகோவில் முருகன் கோவிலின் வைகாசி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேர் திருவிழாவில் இருந்த பாஜகவினர் அமைச்சர் மனோ தங்கராஜ் இறை நம்பிக்கை இல்லாதவர் அவரை தேரை வடம் தொட்டு இழுக்க கூடாது எனவும் பாஜகவினர் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி கருமுட்டை விற்பனை எதிரொலி..புதிய சட்டத்தை அமல்படுத்த - 5 பேர் கொண்ட குழு அமைப்பு