என்ன யாருன்னு நினைச்சீங்க..!சிலம்பம் சுற்றிய அமைச்சர் வியந்து போன நாகர்கோவில்
நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழக அளவிலான சிலம்ப போட்டியை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழக அளவிலான சிலம்பாட்ட போட்டியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
தமிழக அமைச்சர்களில் முக்கிய நபராக வலம் வரும் மனோ தங்கராஜ் இணைய வைரல் வீடியோக்களில் இவரது வீடியோவும் என்று சொல்லும் அளவிற்கு அவவ்போது இவரது வீடியோக்களும் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்த அவர் போட்டிகள் தொடங்கும் முன்பு அங்கு கூடியிருந்த அனைவரையும் சிலம்பம் சுற்றி அசர வைத்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக சுற்றி வருகிறது