முதல்வர் திறந்து வைத்த அடுத்த நாளே.. - தீயாய் பரவும் வானதியின் ட்வீட்!
கிண்டி சிறுவர் பூங்காவில் 5 - 12 வயதுடையவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்கா
கிண்டி சிறுவர் பூங்கா கட்டணத்தைக் குறைக்க பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை கிண்டியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் இயற்கை பூங்காவை நேற்று திறந்து வைத்துள்ள முதல்வர் அவர்களே, இந்த பூங்காவில் 5 - 12 வயதுடையவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளீர்கள்.இது ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்குக்கான செலவினம் அதிகரித்துள்ளது.
கட்டணம்
சிறுவர்கள் தனியாகப் பூங்காவிற்கு வரப்போவதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள சிறுவர் வருகிறார் என்றால், அவருடன் அம்மா,அப்பா, உறவினர்கள் என்று குறைந்தது 2-4 பேர் வரை வருவார்கள்.அதனால் ஒரு குடும்பத்தினருக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
எனவே பெரியவர்களுக்கு ரூ.60 நிர்ணயம் செய்திருப்பது நியாயமானதல்ல. சிறுவர்களுக்கு ரூ.10 என்பதைப்போல பெரியவர்களுக்கான கட்டணத்தை ரூ.20 என்று நிர்ணயம் செய்யப் பொதுமக்கள் சார்பாகக் கோரிக்கை வைக்கிறேன் என்று இவ்வாறு தனது X தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளார்.