வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு - பொதுமக்கள் உற்சாகம்
today
chennai
open
vandalur
guindy park
By Anupriyamkumaresan
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த சென்னை - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 4 மாதங்களுக்கு பிறகு இன்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கானது தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 4 மாதங்களுக்கு பிறகு செங்கல்பட்டில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது.
மேலும், சென்னை - கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவையும் இன்று திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.