ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் - எல்.முருகன்!

Tamil nadu BJP Chennai
By Jiyath May 30, 2024 02:06 PM GMT
Report

பிரதமர் மோடி கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறலாக இருக்க முடியும்? என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்.முருகன் 

நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பிரதமர் மோடி கோவிலுக்கு செல்வது எப்படி தேர்தல் விதிமீறலாக இருக்க முடியும்?

ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் - எல்.முருகன்! | Bjp L Murugan About Admk Jayalalitha

எதிர்கட்சிகள் தற்போது தோல்வி பயத்தில் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை கூறுகிறார்கள். பிரதமர் கோவிலுக்கு செல்வதையோ, தியானம் செய்வதையோ யாராலும் தடுக்க முடியாது.

தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி இதைத்தான் சொல்வார் - இன்றே கணித்த அமித் ஷா!

தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி இதைத்தான் சொல்வார் - இன்றே கணித்த அமித் ஷா!

ராமர் கோவில்

மறைந்த தமிழக முதல்மைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருந்தார். பல கோவில்களை புணரமைத்து, கும்பாபிஷேக விழாக்களை நடத்தினார். சட்டப்பிரிவு 370-ஐ ஜெயலலிதா ஆதரித்து பேசியிருக்கிறார்.

ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் - எல்.முருகன்! | Bjp L Murugan About Admk Jayalalitha

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் பேசியதற்கான ஆதாரம் ராஜ்ய சபா குறிப்பில் உள்ளது" என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.