கட்சிக்காக உழைச்சாங்க தான்...ஆனாலும்!! கவுதமி விவகாரம் - எல்.முருகன் பளிச்!!

Gautami Tamil nadu BJP
By Karthick Oct 23, 2023 08:12 AM GMT
Report

பாஜகவில் இருந்து நடிகை கவுதமி விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிப்போம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விலகிய கவுதமி

பிரபல நடிகை கவுதமி இன்று 25 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர், அழகப்பன் என்பவர் தனது சொத்துக்களை ஏமாற்றி விட்டதாகவும், அவருக்கு பாஜகவின் முக்கிய தலைவர் ஆதரவாக இருப்பதாலும் பாரத ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

l-murugan-about-gautami-exiting-bjp-party

இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்து வரும் நிலையில், இது குறித்து இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கவுதமி குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது, நானும் இப்போது தான் செய்தியில் பார்த்தேன் என குறிப்பிட்டு கட்சியில் நிறையே பேர் வருகிறார்கள் என்றும் அவர்களும் கட்சிக்காக தங்களுடைய நேரத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றார்.  

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

எல்.முருகன் கருத்து

கவுதமியும் கட்சிக்காக நிறைய தடவை பிரச்சாரங்கள் செய்திருக்கிறார்கள் என குறிப்பிட்ட எல்.முருகன் அவர்களுடைய உழைப்பு பாராட்டக்கூடியது என தெரிவித்து ஆனால் என்ன காரணத்திற்காக வெளியே சென்றுள்ளார்கள் என்பது குறித்து விசாரிப்போம் என்றார்.

l-murugan-about-gautami-exiting-bjp-party

அதே நேரத்தில், ராஜபாளையம் தொகுதியில் சீட் கொடுக்கவில்லை என்று கடிதத்தில் சொல்லியிருப்பதற்கு பதிலளித்த அவர், கூட்டணியில் பல தொகுதிகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாக இருந்தது என்றும் தான் கூட ராசிபுரம் அல்லது அவிநாசியில் போட்டியிட வேண்டும் என்று நினைத்க்க கூறி ஆனால் கூட்டணி காரணமாக தாராபுரத்தில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை இருந்தது என்றார். 

l-murugan-about-gautami-exiting-bjp-party

அது போல பல தொகுதிகளை கூட்டணி பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என கூறி, அதில் அந்த ஒரு தொகுதியும் கூட்டணிக் கட்சிக்காக விட்டுக் கொடுத்த தொகுதிதான் என்று கூறினார்.