தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்; கற்களால் விரட்டி விரட்டி அடித்த கிராம மக்கள் - என்ன நடந்தது?
பாஜக வேட்பாளர் மீது கிராம மக்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்களால் தாக்குதல்
மேற்குவங்க மாநிலம் ஜார்க்ரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பிரனாத் துது போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஜார்கிராம் தொகுதிக்குட்பட்ட மோங்லபோட்டாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு பார்வையிடுவதற்காக பிரனாத் துது சென்றார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் என கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து துதுவையும், அவரது ஆதரவாளர்களையும் விரட்டி விரட்டி அடித்தனர். மேலும், கற்கள் மற்றும் கம்புகளை அவர்கள் மீது சரமாரியாக வீசி தாக்கினர்.
குற்றச்சாட்டு
இதில் பாஜக வேட்பாளர் பிரனாத் துதுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து பிரனாத் துது கூறுகையில் "குறிப்பிட்ட பகுதியில் பாஜகவினரை வாக்களிக்கவிடாமல் தடுத்ததாக தகவல் கிடைத்தது.
இதனால் அங்கு சென்று பார்த்தபோது 200-க்கும் மேற்பட்டோர் கற்கள், கம்புகள் கொண்டு துரத்தி, துரத்தி தாக்கினர். இந்த விவகாரத்தில் எங்களுக்கு மாநில போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.