பாஜகவுக்கு இன்றைய நாள்.. 5வது கட்ட தேர்தல் - 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு!
5ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
5ம் கட்ட வாக்குப்பதிவு
2024 மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 5 ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறகிறது. இது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
பரபரப்பில் களம்
இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸ் எம்.பி., உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களம் காண்கின்றனர். ரேபரேலி தொகுதியில் காங்., வேட்பாளராக ராகுலும்,
அமேதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.
லக்னோவில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் இருந்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், பீஹாரின் ஹாஜிபுரில் இருந்து சிராக் பஸ்வான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களம் காண்கின்றனர்.