மக்களவை தேர்தல்; 4ம் கட்ட வாக்குப்பதிவு - வாக்கு எந்திரங்கள் அடித்து உடைப்பு!
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதலால் வாக்கு எந்திரங்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
மக்களவை தேர்தல்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதுவரையிலும் 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று நாட்டில் 4-ஆம் கட்டம் துவங்கியுள்ளது அதன் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
96 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசம் - 25, பீகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேஷ் -8, மகாராஷ்டிரா - 11, ஒடிசா - 4, தெலுங்கானா 17, உத்தரபிரதேசம் - 13, மேற்குவங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1.
வாக்கு எந்திரங்கள்
அந்த வகையில், ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலத்தின் சித்தூர், கடப்பா உள்பட 4 மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடியில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முறைக்கேடு இருப்பதாக 2 கட்சியினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டதால் இந்த மோதல் முற்றியது.
மேலும், வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்குச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.c