ஒரே வாரத்தில் பிட்காயின் விலை இவ்வளவு உயர்வா? அசுர வளர்ச்சியா இருக்கே.!
7 நாட்களில் பிட்காயின் விலை 15 சதவீதம் உயர்ந்து 44,000 டாலரை எட்டியுள்ளது.
பிட்காயின் விலை
முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தைப் பல பிரிவுகளில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரும் நிறுவன முதலீட்டாளர்கள்,
ஹெச்ட்ஜ் பண்ட் முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினர்கள் தங்களுடைய மொத்த நிதி இருப்பில் பெரும் தொகையைக் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர். இதன் பிட்காயின், எதிரியம், ரிப்பிள், போல்காடாட் எனப் பிரபலமான அனைத்து கிரிப்டோகரன்சிகளும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.
அதிகரிப்பு
கிரீன் எனர்ஜி பயன்படுத்தி உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது. அந்த வகையில், பிட்காயின் நீண்ட காலத்திற்குப் பின்பு 40000 டாலர் என்ற அளவீட்டை எட்டிய நிலையில் தற்போது 44,000 டாலர் அளவீட்டை கடந்துள்ளது.
கடந்த 7 நாட்களில் முதன்மைக் காயினான பிட்காயின் 14.42 சதவீதம், எதிரியம் 10.05 சதவீதம் பைனான்ஸ் 0.96 சதவீதமும் உயர்வுடன் விற்பனையாகி வருகின்றன.
இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது பணவியல் கொள்கையில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாத நிலையில் உள்ளதாக அறிவித்தது. இதுதான் காரணமா எனக் கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.